மத்திய அரசு இந்தியா முழுவதும் செயல்படுத்த உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா . சுப்ரமணியம் கூறியுள்ளார் .
- தமிழக முதல்வர் அவர்கள் 2021ல் இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம் என்ற திட்டத்தை தொடக்கினார்.
- விபத்து நடந்த 48 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ கட்டணத்தை அரசாங்கம் செலுத்துவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
- அனைத்து மருத்துவ பராமரிப்பு சேவைகளும் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.
- மாநிலம் முழுவதும் 609 மருத்துவமனைகளில் மக்கள் இச்சலுகைகளைப் பெறலாம்.
- இதில் 204 அரசு மருத்துவமனைகளும், 405 தனியார் மருத்துவமனைகளும் அடங்கும்.
- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு (CMCHIS) தகுதி பெறாதவர்களும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்.
- நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து இலவச சிகிச்சை வழங்கப்படுகின்றது.