• சர்வதேச பெரிய பூனை கூட்டணி (IBCA International Big Cat Alliance) என்பது பெரிய பூனைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு உலகளாவிய முன்முயற்சியாகும் .
  • 2023 ல் ஏழு பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதற்காக இந்தியாவால்  தொடங்கப்பட்டது.

உள்ளடக்கப்பட்ட ஏழு பெரிய பூனைகள்

  1. புலி
  2. சிங்கம்
  3. சிறுத்தை
  4. பனிச்சிறுத்தை
  5. சிவிங்கிப்புலி
  6. ஜாகுவார்
  7. பூமா

IBCA 2025 முன்னேற்றங்கள்

  • இந்தியா 2025 இல் IBCA உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.
  • 97க்கும் மேற்பட்ட நாடுகள் இக்கூட்டமைப்பில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது.
  • வாழ்விடப் பாதுகாப்பு, வேட்டையாடுதலைத் தடுக்கும் முயற்சிகள் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

IBCA இன் நோக்கங்கள்

  • உலகளாவிய பெரிய பூனை பாதுகாப்பை ஊக்குவித்தல்.
  • நிதி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பகிர்வுக்கு உதவுதல்.
  • வனவிலங்கு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்.
  • நிலையான சூழலை உருவாக்கி சுற்றுலாவை  ஊக்குவித்தல்.

பெரிய பூனை பாதுகாப்பில் இந்தியாவின் பங்கு

  • புலிகள் பாதுக்காப்பு திட்டம் (1973) –பெரிய வெற்றி.
  • சிங்கம் திட்டம் மற்றும் சிறுத்தை திட்டம்  – பாதுகாப்புக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
  • ஐந்து பெரிய பூனை இனங்களின் தாயகம் (ஜாகுவார் & பூமா தவிர).