- பூஞ்சை அழிவு அச்சுறுத்தல் – 1,000க்கும் மேற்பட்ட பூஞ்சை இனங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. இவை தற்போது அதிகரித்து வரும் பல்லுயிர் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது.
- IUCN சிவப்புப் பட்டியல் புதுப்பிப்பு – இந்த பட்டியலில் 169,420 இனங்கள் உள்ளன, இதில் பூஞ்சைகள் மற்றும் சாம்பிராணி மரங்கள் உட்பட 47,187 இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- சாம்பிராணி மரத்தின் ஆபத்தான நிலை – சாம்பிராணி உற்பத்திக்கு முக்கியமான போஸ்வெல்லியா இனத்தைச் சேர்ந்த ஐந்து மர வகைகள் அதிகரித்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன, மேலும் பல இனங்கள் தற்போது அருகிய நிலையில் அல்லது மிக அருகிய நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- சாம்பிராணியின் முக்கியத்துவம் – பல நூற்றாண்டுகளாக வாசனை திரவியங்கள், தூபக் கலவைகள் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சாம்பிராணி மரங்களின் வீழ்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சவால்களை ஏற்படுத்துகிறது.