• நிதி ஒதுக்கீடு – 2025-26 ஆம் ஆண்டில் ‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II’ ஐ செயல்படுத்த தமிழ்நாடு அரசு ₹1,087 கோடி ஒதுக்கியுள்ளது.
  • நோக்கம் –  கிராமப்புறங்களில்  உள்ள குளம் புனரமைப்பு, சாலைகளை சிமெண்ட் சாலைகளாக   மேம்படுத்துவது , தெரு விளக்கை  நிறுவுதல் மற்றும் வாழ்வாதார ஆதரவு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • செயல்படுத்துதல் – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்  ராஜ் துறை இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பாகும்.
  • பரப்பளவு – 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 12,482 கிராம பஞ்சாயத்துகளில்,  முதல் கட்டமாக 2,329  பஞ்சாயத்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முடிவு எடுத்தல் – ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய குறிப்பிட்ட பணிகளை வட்டார அளவிலான குழுக்கள் முடிவு செய்யும்.