
- அயலகத் தமிழர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 அன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் பங்களிப்புகளையும் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
- சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவின் தேசிய இளைஞர் தினத்துடன் கொண்டாடபடுகிறது.
அயலகத் தமிழர் தினம் அனுசரிப்பு:
- முக்கியத்துவம்: தமிழ்நாட்டிற்கு வெளியே தமிழ் மொழி பேசும் மக்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதை அங்கீகரிக்கிறது.
- புலம்பெயர் சமூகப் பங்களிப்பு: உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலை, அரசியல், இலக்கியம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
- கலாச்சாரப் பாதுகாப்பு: இளைய தலைமுறையினருக்கு தமிழைக் கற்பிப்பதிலும், பாரம்பரிய நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும், அவர்களின் பாரம்பரியம் உலகளவில் செழிப்பதை உறுதி செய்வதிலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் முயற்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது.
