
அவசரம் 108 செயலி என்பது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அவசரகால மொபைல் செயலி பயன்பாடாகும். 108 அவசரகால உதவி எண்ணின் மூலம் குடிமக்களுக்கு அவசரகால மருத்துவ சேவை , காவல் மற்றும் தீயணைப்பு சேவைகளை விரைவாக அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
- செல்போனில் ஒரு முறை தொடுதலின் மூலம் செய்யும் அவசரகால அழைப்பு – பயனர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைகளுடன் இணைக்கிறது.
- இருப்பிடத்தைக் கண்காணித்தல் – அவசரகால பதிலளிப்பவர்களுக்கு நிகழ்நேர இருப்பிடத்தை அனுப்புகிறது.
- பல சேவை ஆதரவு – ஒரே பயன்பாட்டில் ஆம்புலன்ஸ், காவல் மற்றும் தீயணைப்பு சேவைகளை அணுகலாம்.
- பயனர்களிடைய இடைமுகம் – முக்கியமான சூழ்நிலைகளில் எளிதாகவும் பயன்படுத்தவும் முடியும்.
