
- நாட்டின் எல்லை தாண்டிய பொழுது கார்டு இல்லாத (Card Not Present CNP) பண பரிவர்த்தனைகளுக்கான பாதுகாப்பை RBI அறிவித்துள்ளது.
- இந்தியாவில் வழங்கப்பட்ட ATM அட்டைகளைப் பயன்படுத்தி சர்வதேச டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காண கூடுதல் அங்கீகாரம் (Additional Factor of Authentication AFA) பெற்றுள்ளது .
- அதிகரித்து வரும் இணையதள மோசடி அபாயங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor of Authentication AFA)
- ஒன்றுக்கு மேற்பட்ட சரிபார்ப்பு முறைகள் தேவைப்படும் பாதுகாப்பு செயல்முறை.
- முன்பு உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது கட்டாயமாக்கப்பட்டது.
- பொதுவான முறைகள்: OTP, பயோமெட்ரிக் சரிபார்ப்பு.
- உள்நாட்டு இணையதள கட்டணத்தில் மோசடியை கணிசமாக குறைத்துள்ளது.
RBI முன்மொழியப்பட்ட மாற்றங்கள்
- ATM அட்டைதாரர்கள் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- முறைகள்: பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு OTP, பயோமெட்ரிக் சோதனைகள்.
- RBI விரைவில் பங்குதாரர்களின் கருத்துக்காக ஒரு வரைவு சுற்றறிக்கையை வெளியிடும் என அறிவுறுத்தியுள்ளனர் .
தளத்தில் வங்கி அல்லாத தரகர்களை(NDS-OM Negotiated Dealing System-Order Matching) RBI அனுமதித்தல்
- SEBI இல் பதிவு செய்யப்பட்ட வங்கி அல்லாத தரகர்கள் NDS-OM தளத்தை அணுக RBI அனுமதித்துள்ளது.
- இந்த நடவடிக்கை அரசாங்க பத்திரங்கள் (G-Secs) வர்த்தகத்தில் சில்லறை பங்கேற்பை அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது.
- நிதிச் சந்தைகளில் பணப்புழக்கம் மற்றும் அணுகலை மேம்படுத்துகிறது.
NDS-OM தளம் பற்றி
- பேச்சுவார்த்தை மூலம் பரிவர்த்தனை செய்யும் முறை NDS-OM (Negotiated Dealing System-Order Matching) என்பது RBI ஆல் நிர்வகிக்கப்படும் ஒரு மின்னணு வர்த்தக தளமாகும்.
- அரசாங்க பத்திரங்களில் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
- தொலைபேசி அடிப்படையிலான வர்த்தகத்திற்கு பதிலாக ஆகஸ்ட் 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஏலத்தை உறுதி செய்து, சந்தை வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது.
