V . நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(Indian Space Research Organisation ISRO)புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் எஸ். சோமானாத் அப்பதவி வகித்தார்.
இஸ்ரோவின் புதிய தலைவரான வி. நாராயணன், பல தசாப்தங்களாக இஸ்ரோவில் முக்கிய பங்கு வகித்து வரும் மூத்த உறுப்பினர் ஆவார்.
1984 ஆம் ஆண்டில் இஸ்ரோவில் சேர்ந்து, துருவ செயற்கைக்கோள் ஏவு வாகன திட்டம் Polar Satellite Launch Vehicle (PSLV) மற்றும் திரவ உந்து சக்தி( Liquid Propulsion Systems ) அமைப்புகளின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, வி. நாராயணன், இஸ்ரோவின் முக்கிய பிரிவான திரவ உந்து சக்தி அமைப்புகள் Liquid Propulsion Systems Centre (LPSC) மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்
இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 11வது தலைவராவார்.