இடம்:
- செம்மஞ்சேரியில் உலகளாவிய விளையாட்டு நகரம் (Global Sports City) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்னையின் புறநகரில் பழைய மகாபலிபுரம் சாலையில் ( old Mahabalipuram road OMR) அமைந்துள்ளது.
நோக்கம்:
- தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குவதே முதன்மை நோக்கமாகும். இது விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர பயிற்சி வசதிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- விளையாட்டுத்திறன், தடகளம் மற்றும் உடற்தகுதி கலாச்சாரத்தை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
வசதிகள்:
- இந்த நகரம் ஒரு பெரிய மைதானம், பல கால்பந்து மைதானங்கள், தடகள பாதைகள், ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் மற்றும் வெலோட்ரோம் போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
- இதில் விளையாட்டு அகாடமிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் வசதிகளும் உள்ளது .
