
- ஆந்திரப் பிரதேசத்திலிருந்து உருவாக்கிய பாரம்பரிய கைவினை மர பொம்மை.
- காட்சிப்படுத்தல் : 76வது குடியரசு தின அணிவகுப்பு (2025).
- பாரம்பரியம்: 400 ஆண்டுகளுக்கும் மேலான, கலாச்சார மற்றும் கலை மரபுகளை பிரதிபலிக்கிறது.
- சித்தரிப்புகள்: புராண உருவங்கள், விலங்குகள் மற்றும் வீட்டுப் பொருட்கள்.
- சிந்து சமவெளி நாகரிகத்தின் தோற்றத்தைக் குறிக்கிறது.
- தலைமுறை தலைமுறையாக கைவினைஞர்கள் மூலம் இக்கலை கடத்தப்பட்டு வருகிறது.
- கைவினைஞர்கள் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி இயற்கையுடன் ஆழமான தொடர்பைப் பேணுகிறார்கள்.
பொருட்கள் மற்றும் கைவினை செயல்முறை
- பயன்படுத்தப்படும் மரம்: அங்குடு மரம் (ரைட்டியா டின்க்டோரியா) – மென்மையானது & செதுக்குவதற்கு ஏற்றது.
- இயற்கை சாயங்கள்: விதைகள், இலைகள் மற்றும் பட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
- அரக்கு திருப்பும் நுட்பம்: பாதுகாப்பான, நச்சுத்தன்மையற்ற பூச்சுக்கு அரக்கு பிசினைப் பயன்படுத்துகிறது.
அங்கீகாரம் & தாக்கம்
- புவிசார் குறியீடு : 2017 இல் பெறப்பட்டது.
- உலகளாவிய தேவை: சர்வதேச பொம்மை சேகரிப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்வர்களை ஈர்க்கிறது.
- நிலைத்தன்மை: சுற்றுச்சூழல் சார் உற்பத்தி முறைகள்.
