1. HPV தடுப்பூசி இயக்கம்:
  • இந்தியா, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்காக செர்வாவாக் (Cervavac) தடுப்பூசியை (சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரித்தது) அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பொதுத் தடுப்பூசி திட்டமான “யூனிவர்சல் இம்யூனைசேஷன் பிரோகிராம்”(UIP) உட்படச் சேர்க்கப்படும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது..
  1. திரையிடல் மற்றும் ஆரம்ப கண்டறிதல்:
  • 30 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல வாழ்வு மையங்கள் (Ayushman Bharat Health & Wellness Centres – AB-HWCs) மற்றும் மொபைல் சுகாதார யூனிட்டுகள் மூலமாக, வழக்கமான பாப் ஸ்மியர் (Pap smear)  மற்றும் HPV DNA பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்..
  1. 2030 க்குள் உலக சுகாததார அமைப்பின் 90-70-90 இலக்கு:
  • கருப்பை புற்றுநோயை ஒரு பொது சுகாதார பிரச்சனையாக ஒழிப்பதற்காக, இந்தியா உலக சுகாததார அமைப்பின்   இலக்குகளைப் பின்பற்றுகிறது – 90% HPV தடுப்பூசி, 70% பரிசோதனை கவரேஜ் மற்றும் கண்டறியப்பட்ட நிகழ்வுகளுக்கு 90% சிகிச்சையளிக்கப்படுகிறது  .