
கிரகங்களின் அணிவகுப்பு என்பது நாம் பூமியிலிருந்து பார்க்கும் போது பல கிரகங்கள் வானத்தின் ஒரே பகுதியில் ஒரே நேர்கோட்டில் அமைவது போல் தோன்றும் நிகழ்வு ஆகும்.
வகைகள்:
- சிறு ( mini ) அணிவகுப்பு: மூன்று கிரகங்கள் அணிவகுக்கும் போது.
- சிறிய ( small ) அணிவகுப்பு: நான்கு கிரகங்கள் அணிவகுக்கும் போது.
- பெரிய ( large ) அணிவகுப்பு: ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் அணிவகுக்கும் போது.
- மகத்தான ( great )அணிவகுப்பு: எட்டு கிரகங்களும் அணிவகுக்கும் போது (மிகவும் அரிய நிகழ்வு ).
2025 ஜனவரியில், ஆறு கிரகங்கள் இரவு நேரத்தில் வானத்தில் தெரியும். “கிரகங்களின் அணிவகுப்பு” என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்த நிகழ்வு, ஜனவரி 21 முதல் பிப்ரவரி 21 வரை மிகவும் தனித்துவமானதாக இருக்கும். ஜனவரி 29 பௌர்ணமி அன்று வானில் பார்க்க முடியும்.
காணப்படும் கிரகங்கள்:
- வெள்ளி , செவ்வாய், வியாழன் மற்றும் சனி: இந்த கிரகங்களை எளிதில் கண்ணால் காணலாம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மேற்கு வானத்தில் வெள்ளி மற்றும் சனி தாழ்வாகத் தோன்றும், அதே நேரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் உயரமாக இருக்கும்.
- யுரேனஸ் மற்றும் நெப்டியூன்: இந்த தொலைதூர கிரகங்களைப் பார்வையிட தொலைநோக்கி தேவைப்படும்.
