1. இந்தியாவில் முதல் பதிவு: தீங்கு விளைவிக்கும் அயல்நாட்டு இனமான சிறிய தேன்கூடு வண்டு, இந்தியாவில் முதன்முறையாக கண்டறியபட்டுள்ளது.
  2. மேற்கு வங்கம் : இது மேற்கு வங்காளத்தில் உள்ள தேனீ பண்ணையில் ஐரோப்பிய தேனீக்களின்  வகை (ஏபிஸ் மெல்லிஃபெரா)  பெரிய கூட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  3. தோற்றம் மற்றும் பரவல்: 1867 இல் ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா  பாலைவனத்தில் அடையாளம் காணப்பட்ட இந்த வண்டு, பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
  4. ஆசியாவில் இருப்பு: கடந்த பத்தாண்டுகளில், பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது.
  5. தேனீ வளர்ப்புக்கு அச்சுறுத்தல்: சிறிய தேன்கூடு வண்டு வேகமாக இனப்பெருக்கம் செய்து கூட்டங்களுக்குள் விரைவாக பரவும் திறன் காரணமாக தேனீ வளர்ப்புக்கு ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.