• சுனிதா வில்லியம்ஸின் சாதனை: இந்திய வம்சாவாலியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ், நீண்ட நேரம் விண்வெளியில் நடந்து  சாதனையை படைத்தார்.
      • விண்வெளி நடை விவரங்கள்:
      • சுனிதா வில்லியம்ஸும் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஜனவரி 31 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட பழுதுகளை மேற்கொண்டனர்.
      • விண்வெளி நிலையத்திற்கு வெளியே 5 மணி நேரம் 26 நிமிடங்கள் செலவிட்டனர்.
      • இந்த சாதனையின் மூலம், சுனிதா வில்லியம்ஸ் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார்(மொத்தமாக 62 மணி நேரம் 6 நிமிடங்கள்).
      • பயணக் காலக்கோடு:
      • சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் முந்தைய ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ISS ஐ அடைந்தனர்.
      • அவர்கள் ஆரம்பத்தில் 9 நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தனர், ஆனால் ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியவில்லை.
      • திரும்புதல் திட்டங்கள்:
    • ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸும் ,புட்ச் வில்மோரும் மார்ச் மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.