• சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருது என்பது இந்தியாவில் பேரிடர் மேலாண்மையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் மதிப்புமிக்க தேசிய விருதாகும்.
  • நிறுவன பிரிவில் INCOIS இந்த விருதைப் பெறுவது, அவர்களின்  பணிக்கான எடுத்துக்காட்டாகும்.
  • INCOIS இன் பங்களிப்புகள்: இந்தியப் பெருங்கடல் தகவல் சேவை மையம் (Indian National Centre for Ocean Information Services INCOIS ),  கடல் தொடர்பான விபத்துகளின் போது , இந்தியாவின் பேரிடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்களித்துள்ளது .
  • சுனாமி பற்றி  முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு, புயல் கணிப்பு மற்றும் கடலோர  பகுதியில் வாழும் மக்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குவதில்  சிறப்பு பெற்றது.
  • இந்தியாவில் சுனாமியை  முன்கூட்டியே எச்சரிக்கை  மையத்தை (Operating the Indian Tsunami Early Warning Centre  ITEWC ) இயக்குதல்
  • அதிக அலை, மற்றும் புயல் போன்ற கணிப்புகளை வழங்குவது
  • தேடல் மற்றும் மீட்பு உதவி கருவி(SARAT Search and Rescue Aided Tool) மற்றும் உண்மையான நேரத் தரவு ஒருங்கிணைப்பிற்கான காட்சிப்படுத்தல் தளம் (SynOPS Synergistic Ocean Observation Prediction Services) போன்ற கருவிகளை உருவாக்குதல்