• அறிவிப்பு தேதி: ஜனவரி 2025
  • தலைப்பு: இரும்பின் தொன்மை: தமிழ்நாட்டின் சமீபத்திய கதிரியக்க நாட்கள்
  • முக்கியத்துவம்: தொல்லியல் மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு தமிழ்நாட்டில் இரும்பு யுகத்தை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளியுள்ளது, இது கிமு மூன்றாம் முதல் நான்காம் ஆயிரமாண்டு வரை இப்பகுதியில் இரும்பு பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.

இரும்புக்காலம்:

  • தமிழ்நாட்டில் இரும்புக் காலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது,.
  • கிமு 3000 ஆம் ஆண்டிலேயே இப்பகுதியில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது .
  • இரும்புக் காலம் தமிழகத்தில் தொடங்கியதாக  இம்முடிவுகள் மெய்ப்பிகின்றன.  இது மனித வரலாற்றுக்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும்.

தொல்லியல் களங்கள்:

  • பின்வரும் தளங்களில் இருந்து மாதிரிகள் கண்டுப்பிடிக்கபட்டுள்ளன.

 

  • சிவகளை(தூத்துக்குடி மாவட்டம் )
  • ஆதிச்சநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்)
  • மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி மாவட்டம்)
  • இந்த தளங்களில் இரும்பு உருக்கும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இருந்ததாக நம்பப்படுகிறது

அறிவியல் முறை:

  • மூன்று புகழ்பெற்ற ஆய்வகங்கள்

 

  • பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆப் பாலியோசயின்சஸ், லக்னோ
  • இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், அகமதாபாத்
  • பீட்டா அனலிடிக் ஆய்வகம் புளோரிடா, அமெரிக்கா