தமிழ்நாடு அரசின் பாதுகாப்பு முயற்சிகள்:
Published on: April 2, 2025
- சிறப்பு மையத்தை நிறுவுதல்:
- சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பராமரிக்க முக்கியமான இருவாச்சி பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதில் இந்த மையம் கவனம் செலுத்தும்.
- அழிந்து வரும் இனங்கள் பாதுகாப்பு:
- அழிவுப் பாதிப்பில் உள்ள உயிரினங்களுக்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி கீழ்காணும் பணிக்காக பயன்படுத்தப்படும்:. வாழிட பாதுகாப்பு , இன எண்ணிக்கை மதிப்பீடு, சமூக விழிப்புணர்வு. இவை பின்வரும் உயிரினங்களுக்காக மேற்கொள்ளப்படும்:
- சிங்கவால் குரங்கு (Lion-tailed Macaque)
• மெட்ராஸ் முள்ளெலி (Madras Hedgehog)
• கழுதைப் புலி (Hyenas)
• மக்சீர் மீன் (Mahseer Fish)
- வங்காள நரி மற்றும் குள்ளநரிகளுக்கு முன்னுரிமை:
- மேற்கூறிய இனங்களுடன் கூடுதலாக, வங்காள நரி மற்றும் குள்ளநரி ஆகிய இரண்டு இனங்களும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பங்கு வகிப்பதால், அவற்றின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- ஆலிவ் ரிட்லி ஆமைகளின் தொலை அளவீட்டு ஆய்வு:
- ஆலிவ் ரிட்லி ஆமைகளின் கூட்டப் பகுதிகளை அடையாளம் காண தமிழ்நாடு வனத்துறை தனது முதல் டெலிமெட்ரி ஆய்வை ₹ 84 லட்சம் முதலீட்டில் நடத்தவுள்ளது. இந்த ஆய்வு, ஆமைகளின் முட்டையிடும் பழக்கவழக்கம் மற்றும் உணவு தேடும் நடத்தை பற்றிய புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது, இது அவற்றின் பாதுகாப்பிற்கும் மிக முக்கியமானதாகும்.
- சமூக ஈடுபாடு மற்றும் கல்வி:
- உள்ளூர் பாதுகாப்பு முயற்சிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகளை உருவாக்கும்.
- இளைஞர்களிடையே பல்லுயிர் பாதுகாப்பிற்கு பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து 20,000 மாணவர்களுக்கு கல்வி மற்றும் ஈடுபாடு அளிக்கும் வகையில் சான்றிதழ் திட்டம் தொடங்கப்படும்.
Date Picker