- நிறுவப்பட்டது: 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்டியல் சாதிகள்/பட்டியல் பழங்குடியினருக்கான மாநில ஆணையச் சட்டம், 2021 இன் கீழ் நிறுவப்பட்டது.
- நோக்கம்: தமிழ்நாட்டில் பட்டியல் சாதிகள் ( Scheduled Caste SC ) மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( Scheduled Tribes ST ) ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாப்பது.
- செயல்பாடுகள்: புகார்களை விசாரித்தல், கொள்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்தல் மற்றும் SC/ST நலச் சட்டங்களின் அமலாக்கத்தை கண்காணித்தல்.
அமைப்பு:
- தலைவர்: நீதிபதி பி.ஆர். சிவக்குமார் (ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி) (அக்டோபர் 2021 இல் நியமிக்கப்பட்டார்).
- துணைத் தலைவர்: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம்.
- உறுப்பினர்கள்: மாநில அரசால் நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள்.
சமீபத்திய முன்னேற்றங்கள்:
- ஜூன் 2024: தலைவரின் வயது வரம்பு 70 லிருந்து 75 ஆக நீட்டிக்கப்பட்டது.
- இமையம் தனது செல்லாத பணம் நாவலுக்காக 2020 இல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
