கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அருகே கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உள்ளது.- இந்த சிலையை முன்னாள் முதல்வர் கருணாநிதி 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்தார்.
- தமிழக அரசு தற்போது இதன் வெள்ளி விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
முதலமைச்சரின் அறிவிப்புகள்:
- 133 உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் திருக்குறள் தொடர்பான அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும்.
- டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும்.
- கன்னியாகுமரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
திறப்பு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள்:
- விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும், கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- வெள்ளி விழா கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளில், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின் புத்தகங்கள், திருவள்ளுவர் சிலைகளை காட்சிப்படுத்தும் கண்காட்சிகளை திறந்து வைத்தார்.
- ரூ.1.45 கோடியில் கட்டப்படவுள்ள வெள்ளி விழா வளைவுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அருகே கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உள்ளது.