- தமிழகத்தில் தொல்குடி திட்டத்தின் பல்வேறு முயற்சிகள் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கட்டமைப்பு மேம்பாடு:
- பழங்குடியினர் பகுதிகளில் உள்ள சாலை வசதிகள், குடிநீர், தெரு விளக்குகள் மற்றும் நிரந்தர கான்கிரீட் வீடுகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது .
வாழ்வாதார மேம்பாடு:
- பழங்குடியின சமூக உறுப்பினர்களின் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.
- இதில் பல்வேறு விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகும் .
திறன் மேம்பாடு:
- குறிப்பாக பழங்குடியின இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர்களுக்கு தேவையான திறன்களை பயிற்சியின் மூலம் கற்பிக்கப்படுகிறது.
கல்வி மேம்பாடுகள்:
- பழங்குடியினர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுதல் போன்ற முயற்சிகள் இத்திட்டத்தில் அடங்கும்.
ஆராய்ச்சி ஊக்குவிப்பு:
- பழங்குடியினர் மக்கள் தொகை பற்றிய ஆராய்ச்சியை இந்த திட்டம் ஊக்குவிக்கிறது. மாணவர்கள் பழங்குடியினரின் வாழ்க்கையின் பல்வேறு தரவுகளை ஆராய உதவித்தொகை திட்டங்கள் மூலம் இது செயல்படுகிறது.
