(NAKSHA – National Geospatial Knowledge-based Land Survey of Urban Habitations)

  • துவக்கியவர்: மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்.
  • எதன் கீழ்: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நில ஆவணங்களை  நவீனமயமாக்கல் திட்டம் ( Digital India Land Records Modernization Programme DILRMP).

நக்ஷா என்றால் என்ன?

  • நகர்ப்புற நில ஆவணங்களுக்கான விரிவான புவிசார் ஆய்வு முயற்சியாகும் .
  • துல்லியமான வரைபடத்திற்கு ஜிஐஎஸ் (Geo information system) தொழில்நுட்பம், வான்வழி மற்றும் கள ஆய்வுகளைப் பயன்படுத்துகிறது.
  • 35 சதுர கி.மீ க்கும் குறைவான பரப்பளவு மற்றும் 200,000 க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கவனம் செலுத்துகிறது.
  • திட்டத்தின் காலம்: 1 வருடம்.

முயற்சியின் தேவை

  • நகர்ப்புற பகுதிகள் காலாவதியான நில ஆவணங்களால் பாதிக்கப்படுகின்றன, இது நிர்வாகம் மற்றும் வரி விதிப்பை பாதிக்கிறது.
  • கிராமப்புற நில ஆவணங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் நகர்ப்புற பகுதிகளில் சரியான வரைபடம் இல்லை.
  • 2024 மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டது, 2025 இல் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.