குழுவின் நோக்கம்:

  • இக்குழுவின் முதன்மை நோக்கம், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதன் மூலம் , மாநிலத்தின் நிதி தாக்கங்களைக் கருத்தில் கொண்டு நன்மை தீமைகளை பகுப்பாய்வு செய்வதாகும்.
  • அவர்கள் தற்போதைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் Contributory Pension Scheme (CPS) மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்  (Unified Pension Scheme UPS) ஆகியவற்றையும் ஆய்வு செய்வார்கள்.

குழு அமைப்பு:

இந்த குழுவில் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உள்ளனர், அவர்கள்:

  • ககன்தீப் சிங் பேடி (IAS), கூடுதல் தலைமைச் செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை)
  • கே.ஆர். சண்முகம், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் முன்னாள் இயக்குனர்
  • பிரதிக் தயால், நிதித் துறையின் துணைச் செயலாளர் (வரவு செலவுத் திட்டம்) (உறுப்பினர்-செயலாளர்)

அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு:

  • குழு அதன் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து (பிப்ரவரி 2025) ஒன்பது மாதங்களுக்குள் தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத்துவம்:

  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகும்.
  • தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின்    ஓய்வூதியத் திட்டமாகும்.