பிரதம மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் நீர்வடிகால்ப்பகுதி மேம்பாட்டுக் கூறு 2.0
Published on: January 21, 2025
ஹர் கர்கோ பானிஎன்ற முழக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா (PMKSY) உறுதியான நீர்ப்பாசனத்துடன் சாகுபடிப் பரப்பை விரிவுபடுத்தவும், நீர் விரயத்தைக் குறைக்கவும் மற்றும் நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் செயல்படுத்தப்படுகிறது.
PMKSY உறுதியான நீர்ப்பாசனத்திற்கான ஆதாரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், ” ஜல் சஞ்சய்” மற்றும் ” ஜல் சிஞ்சன் ” மூலம் மழைநீரை நுண்ணிய அளவில் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு நீர்ப்பாசனத்தையும் உருவாக்குகிறது.
“ஒரு துளி-அதிக பயிர்” என்பதை உறுதி செய்வதற்காக மானியம் மூலம் நுண்ணீர் பாசனமும் ஊக்குவிக்கப்படுகிறது
விரிவாக்கம் : பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா (PMKSY) இன் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு கூறு 2.0 (WDC 2.0).
வெளியிடப்பட்டஆண்டு: 2021
செயல்படுத்தும் நிறுவனம்: நில வளத் துறை (DoLR), ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (MoRD), மாநில அரசுகள்.
நோக்கம்:
நீர் இருப்பு மற்றும் நிலையான விவசாயத்தை உறுதி செய்ய மானாவாரி பகுதிகளை (பாசனம் இல்லாமல் மழைநீரையே நம்பி விவசாயம் செய்யப்படும் பகுதியாகும்) மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல்.
நீர்வடிப்பகுதி மேலாண்மை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
நீர் மற்றும் மண் பாதுகாப்பில் நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல்.