இது இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டமாகும்.
- நோக்கம்:
- இந்தியாவில் முறைசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கு முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தகுதி:
- முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கானது.
- இந்தத் திட்டத்தில் சேருவதற்கான வயது 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
- மாத வருமானம் ₹15,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- முக்கிய அம்சங்கள்:
- 60 வயதை எட்டிய பிறகு மாதம் ₹3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
- இது விருப்பமான மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்.
- இந்திய அரசு அதற்கான பங்களிப்பைச் செய்கிறது.
- சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு அல்லது கணவருக்கு குடும்ப ஓய்வூதியமாக ₹1,500 (50%) வழங்கப்படும்.
- நிர்வாகம்:
- இந்தத் திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
- இந்தத் திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ( Life Insurance Corporation of India LIC ) மற்றும் ( பொது சேவை மையம் CSC இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் ) common service centre CSC e-Governance Services India Limited )ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
- பதிவு:
- பொது சேவை மையங்கள் ( Common Service Centres CSCs) வழியாக பதிவு செய்யலாம்.
- ஆதார் மற்றும் ஜன்தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும்.
