புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து மாநில திட்டக்குழு அமைப்பு :
Published on: April 11, 2025
- வேலை நேரம்: 53% க்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும், சேவை துறையில் பணி புரியும் நபர்கள் தினசரி 12 மணி நேரம் வரை பணி மேற்கொள்கின்றனர் .
- துறை வாரியாக : கட்டுமானத் துறையில் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 10 மணி நேரமும் , உற்பத்தித் துறையில் பாதி பேர் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக பணி மேற்கொள்கின்றனர் .
- பாதுகாப்பு : சுமார் 84% புலம்பெயர் தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்கள் இல்லாமல் பணியமர்த்தப்படுகிறார்கள்.
- சமூக பாதுகாப்பு : பெரும்பாலான தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு அல்லது ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகளைப் பெறுவதில்லை.
- முறைசாராத்தன்மை: புலம்பெயர் தொழிலாளர்களின் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத தன்மையை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
Date Picker