பெயர்: போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம்

இடம்: போலாவரம் கிராமம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா

  • நதி: கோதாவரி ஆறு
  • வகை: நீர்ப்பாசனம், நீர்மின் சக்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான பல்நோக்குத் திட்டம்.
  • தற்போதைய நிலை: ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014-ன் கீழ் 2014-ல் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது.

பிரதான நோக்கம்

  1. நீர்ப்பாசனம்:
  • ஆந்திராவில் 2 லட்சம் ஹெக்டேருக்கு பாசன வசதி அளிப்பது .
  • வறட்சி பாதித்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய உதவுதல்.
  1. குடிநீர்:
  • ஆந்திராவில் 540 கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு குடிநீர் வினியோகம்.
  1. வெள்ளக் கட்டுப்பாடு:
  • கோதாவரி நதியின் வெள்ள நீரை ஒழுங்குபடுத்துதல்.
  1. நீர் மின் உற்பத்தி:
  • நிறுவப்பட்ட திறன்: 960 மெகாவாட் (நீர்மின் நிலையம்).
  1. நதிகள் இணைப்பு:
  • கோதாவரி-கிருஷ்ணா இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.