போஷான் திட்டம் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN)
செய்திகளில்:
பிரதமர்-போஷான் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களின் விலையை 9.5% உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விலை உயர்வு 2025 மே 1 முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக 2025-26 நிதியாண்டில் கூடுதலாக ₹954 கோடி மத்திய அரசிற்கு கூடுதல் செலவாகும் .
- பிரதமர் – போஷான் திட்டம்:
முன்னதாக இத்திட்டம் மதிய உணவுத் திட்டம் என்று அழைக்கப்பட்டது.
கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும். இது நாடு முழுவதும் உள்ள 10.36 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 11.2 கோடி குழந்தைகளுக்கு தினமும் சூடான சமைத்த உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நோக்கங்கள் மற்றும் திருத்தப்பட்ட கட்டணங்கள்:
இந்தத் திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதையும், குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்கள் பள்ளி வருகை மற்றும் இடைநிற்றலை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு மாணவருக்கான தினசரி உணவுக்கான திருத்தப்பட்ட செலவு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ₹6.78 ஆகவும், உயர் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ₹10.17 ஆகவும் உள்ளது.
- ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள் மற்றும் பணவீக்கம் கண்காணிப்பு:
வகுப்பு நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும் வகையில், உணவில் பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் ஆகியவை குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். உணவுப் பொருட்களுக்கான பணவீக்கத் தரவுகள் தொழிலாளர் பணியகத்தால், 20 மாநிலங்களில் உள்ள 600 கிராமங்களில் இருந்து பெறப்பட்ட CPI-Rural Labourers (CPI-RL) அடிப்படையில் வழங்கப்படுகிறது.
- மிஷன் போஷான் 0 மற்றும் நிதி ஒதுக்கீடு:
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள போஷான் அபியான், 2021 ஆம் ஆண்டில் மிஷன் போஷான் 2.0 இன் கீழ் துணை ஊட்டச்சத்து திட்டத்துடன் இணைக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு 60:40 (மத்திய அரசு:மாநில அரசுகள்), வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு 90:10 மற்றும் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100% மத்திய அரசு நிதியுதவி என்ற விகிதத்தில் உள்ளது.
