மகா கும்பமேளா 2025 என்பது ஒரு புனித யாத்திரை, பிரயாகராஜில் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறுகின்றது. இது ஆன்மீக விழிப்புணர்வு, கலாச்சார கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமைக்காக மில்லியன் கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கும்.

  • ‘கும்பமேளா’ என்ற சொல் ‘கும்பக்’ (அழியாமையின் அமுதத்தின் புனித குடம்) என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது.

கும்பமேளா பற்றிய முக்கிய தகவல்கள்

இது பூமியில் மிகப்பெரிய அமைதியான யாத்ரீகர்கள் கூட்டமாகும்.  பங்கேற்பாளர்கள் புனித நதியில் நீராடுவார்கள். இது 4 வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது, அவை

  • கும்பமேளாவின் பல்வேறு வகைகள்:
    • கும்பமேளா 12 ஆண்டுகளில் 4 முறை  கொண்டாடப்படுகிறது.
    • ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில், ஒவ்வொரு 6 வது ஆண்டும் அர்த்-கும்பமேளா நடத்தப்படுகிறது.
    • மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குப் பிறகு ( 12 ‘பூர்ண கும்பமேளா’க்களுக்குப் பிறகு பிரயாகில் கொண்டாடப்படுகிறது.
    • பிரயாக்ராஜில் ஒவ்வொரு ஆண்டும் மாக் (ஜனவரி-பிப்ரவரி) மாதத்தில் மாக் ( Maagh )கும்பமேளா கொண்டாடப்படுகிறது.