
மின்மதி செயலி என்பது இந்தியாவில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு (SHGs) அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் தளமாகும்.
- டிஜிட்டல் அதிகாரமளித்தல்: SHG பெண்களுக்கு தொழில்நுட்பத்தை எளிதாக அணுகுவதற்கு வழிவகுக்கிறது. அவர்களை பயிற்றுவித்து , சக SHGs மற்றும் தங்கள் தயாரிப்புகளை நுகர்வோர்களுடன் இணைக்க முடியும்.
- பொருளாதார அதிகாரமளித்தல்: கடன் விண்ணப்பங்கள், தவணைத் திரும்பச் செலுத்துதல் மற்றும் சேமிப்பு மேலாண்மை உள்ளிட்ட நிதி பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துகிறது.
- சமூக அதிகாரமளித்தல்: SHGsயை இணைக்க, அறிவைப் பகிர்ந்து கொள்ள மற்றும் பல்வேறு முயற்சிகளில் இணைந்து செயல்பட ஒரு தளத்தை வழங்குகிறது.
நன்மைகள்:
- விரிவடைந்த சந்தை அணுகல்முறை : SHGs-க்கு தங்கள் தயாரிப்புகளை நுகர்வோர்களுடன் இணைக்கிறது, இதன் மூலம் அவர்களின் சந்தை வரம்பை மேலும் விரிவுபடுத்துகிறது.
- மேம்பட்ட நிதி மேலாண்மை: வருமானம் மற்றும் செலவுகளை கண்காணிக்க மற்றும் கடன்கள் மற்றும் சேமிப்புகளை நிர்வகித்தல் உள்ளிட்ட தங்கள் நிதிகளை மிகவும் திறமையாக நிர்வகிக்க SHGs-க்கு உதவுகிறது.
- மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாடு: SHGs-க்கு தங்கள் வணிகத் திறன்களை மேம்படுத்த உதவும் பயிற்சி மற்றும் வளங்களை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
- பெண்களுக்கு அதிகாரமளித்தல்: பெண்களுக்கு வணிகத்தில் வெற்றி பெறத் தேவையான கருவிகள் மற்றும் வளங்களை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கிறது.
