• மெசர்-மேட்டில் நிறுவனம் “இந்தியாவின் பட்டதாரி திறன் குறியீடு 2025” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு

  • இந்த அறிக்கையின்படி, இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு திறன் குறைந்துள்ளது.
  • 2025-ஆம் ஆண்டில், 42.6% பட்டதாரிகள் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
  • இது 2023-இல் 44.3%-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இதற்கான முக்கிய காரணம், வேலை வழங்குபவர்கள் எதிர்பார்க்கும் திறன்களுக்கும், பட்டதாரிகளிடம் உள்ள திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதே ஆகும்.

வேலைவாய்ப்பு வேறுபாடுகள்

  • உயர்ந்த தரக் கல்லூரிகளில் (டயர்-I) பட்டம் பெற்றவர்கள் அதிக வேலைவாய்ப்பு விகிதத்தை (48.4%) கொண்டுள்ளனர்.
  • அடுத்து டயர்-II (46.1%) மற்றும் டயர்-III (43.4%) கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள் உள்ளனர்.
  • இந்திய மாநிலங்களில், டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவை அதிக வேலைவாய்ப்புத் தகுதியுள்ள பட்டதாரிகளை கொண்டுள்ளன.