• ISRO CROPS என்பது சுற்றுவட்டப்ப்பாதை தாவர ஆய்வுகளுக்கான சுருக்க ஆராய்ச்சி தொகுதி (CROPSCompact Research Module for Orbital Plant Studies)
  • விண்வெளியில் உள்ள ஈர்ப்பு குறைந்த சூழலில் தாவரங்களை வளர்த்து நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட தானியங்கி தளமாகும்.
  • விண்வெளியில் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்வது CROPS சோதனையின் முதன்மை நோக்கமாகும்.
  • இது நீண்ட கால விண்வெளி பயணங்கள் மற்றும் விண்வெளி குடியேற்றங்களை நிறுவுவதற்கான சாத்தியத்திய கூறாகும்
  • CROPS சோதனை டிசம்பர் 30, 2024 அன்று ISRO இன் PSLV-C60 திட்டத்தில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • விஞ்ஞான ஆராய்ச்சிக்காக PSLV ராக்கெட்டின் நான்காவது நிலையை மறுபயன்பாடு செய்யும் POEM-4 தளத்தில் எட்டு பருப்பு விதைகள் வைக்கப்பட்டுள்ளன.
  • ஏவப்பட்ட நான்கு நாட்களுக்குள், பருப்பு விதைகளில் இலைகள்  முளைத்தன.  இது விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகிறது.
  • இந்த வெற்றிகரமான ISRO இன் விண்வெளி உயிரியல் ஆராய்ச்சிக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் துறையின் லட்சியங்களுள் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.