TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் I, குரூப் II & II A , குரூப் IV , மற்றும் HR&CE- குரூப் I B,VII A , VII B, VIII போன்ற போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியினை சின்மயா அகாடமி , சேவைமனப்பான்மையுடன் குறைவான கட்டணத்தில் சென்னை மாநகரில் வார நாட்கள் (REGULAR) மற்றும் வார இறுதி நாட்களில் (WEEKENDS) அளித்து வருகிறது . இந்த பயிற்சி வகுப்புகளை நேரடியாகவும் (OFFLINE ) இணைய வழியிலும் (ONLINE) வழங்கப்பட்டு வருகின்றது.
ENQUIRY FORM
எங்களது பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
GOOGLE REVIEWS
எங்களது பயிற்சி புத்தகங்கள்
போட்டித்தேர்வர்கள் TNPSC பாடங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அலகு வாரியாக வரைபட விளக்கங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயிற்சி புத்தகங்கள் உள்ளன. துறைசார் வல்லுநர்களின் சிறப்பு வழிகாட்டுதல் மூலம் பொது அறிவியல் , இந்திய புவியியல் , இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம் , இந்திய வரலாறு மற்றும் பண்பாடு , நவீன இந்திய வரலாறு , தமிழக வரலாறு மற்றும் பண்பாடு , தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் ஆகிய பாடங்களுக்கு எளிமையான விளக்கங்களுடன் நமது பயிற்சி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன .
ஆலோசனைக் குழு
நேர்மையான மற்றும் திறமையான அரசு அலுவலர்களாக நம்முடைய போட்டித் தேர்வர்களை உருவாக்கும் உயரிய நோக்கத்தினை கொண்டது நம் சின்மயா அகாடமி. இதன்பொருட்டு பல துறைகளிலும் ஆழ்ந்த அனுபவம் கொண்ட , ஓய்வு பெற்ற முன்னாள் உயர் அதிகாரிகளையும், நிபுணர்களையும் உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவினை சின்மயா அகாடமி கொண்டுள்ளது. இவர்களின் மதிப்பு மிகுந்த அறிவுரைகள் TNPSC குரூப் I, II / II A, HR &CE போன்ற தேர்வுகளில் மாணவர்கள் நேர்காணல் தேர்வினை எளிமையாக எதிர்கொண்டு வெற்றிபெற பயனுள்ளதாய் அமைகின்றது.
நம்முடைய பயிற்றுநர்கள்
நம்முடைய சின்மயா IAS அகாடமியின் பயிற்றுநர்கள் ஒவ்வொருவரும் எட்டு வருடங்களுக்கும் அதிகமான போட்டித் தேர்வு பயிற்சி அனுபவத்தினை கொண்டவர்கள். அனைத்து மாணவர்களும் எளிமையாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் வரைபட விளக்கங்கள் மற்றும் வீடியோ விளக்கங்கள் மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் நிபுணத்துவம் பெற்றவர்கள். போட்டித் தேர்வர்கள் குறைவான காலத்தில் விரைவாக வெற்றி பெற முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பாடங்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சி திட்டத்தினை தயார் செய்து பாடங்களை எளிதில் நினைவில் நிற்கச் செய்யும் வகையில் பயிற்றுவிக்கும் திறன் படைத்தவர்கள்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுகள்
துணை ஆட்சியர், மாவட்ட காவல் துணைக் கண்காளிப்பாளர், தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அலுவலர், மாவட்ட பதிவாளர், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், ஊரக வளர்ச்சி துணை இயக்குநர், வணிக வரி துணை ஆணையர் போன்ற பதவிகளுக்காக TNPSC தேர்வாணையத்தினால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு (Prelims) முதன்மைத் தேர்வுக்கான (Mains) நுழைவுத்தேர்வாக கருதப்படுகிறது. முதன்மைத்தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே இறுதி பணி ஒதுக்கீடுகளுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. முதன்மைத் தேர்வு நான்கு தாள்களைக் கொண்டது (1 தமிழ் தகுதி தேர்வுத்தாள் + 3 பொதுஅறிவுத் தாள்கள்) . தமிழ் தகுதித் தேர்வில் குறைந்த பட்சமாக 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற பொதுஅறிவுத் தாள்கள் விடைத்திருத்தலுக்கு எடுத்துக்கொள்ளப்படும். பின்னர் நேர்காணல் தேர்வு நடைபெறும்
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உதவி ஆணையர் பதிவிக்காக TNPSC தேர்வாணையத்தினால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. முதல்நிலைத் தேர்வு (Prelims) முதன்மைத் தேர்வுக்கான (Mains) நுழைவுத்தேர்வாக கருதப்படுகிறது. முதன்மைத்தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே இறுதி பதவி ஒதுக்கீடுகளுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. முதன்மைத் தேர்வு நான்கு தாள்களைக் கொண்டது (1 தமிழ் தகுதி தேர்வுத்தாள் + 1 பொதுஅறிவுத் தாள்கள் + 1 இந்து சமயம் – துறைத்தாள் +1 சட்டம் – துறைத்தாள் ) . தமிழ் தகுதித் தேர்வில் குறைந்த பட்சமாக 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற 1 பொதுஅறிவுத் தாள் மற்றும் 2 துறைத்தாள்கள் விடைத்திருத்தலுக்கு எடுத்துக்கொள்ளப்படும். பின்னர் நேர்காணல் தேர்வு நடைபெறும்.
நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், கைத்தறி ஆய்வாளர் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு TNPSC தேர்வாணயம் இத்தேர்வை நடத்துகின்றது. இத்தேர்வு இரண்டு படிநிலைகளை கொண்டது.
முதல் நிலை தேர்வு
Tnpsc Group II & IIA — 300 Marks (Objective Type)
முதன்மை தேர்வு
Group II – 300 Marks (Descriptive Type)
Group IIA – 300 Marks (Objective Type)
கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், வனக்கப்பாளர், கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர், மாநில அமைச்சகங்களின் பல்வேறு துறைகளின் கீழ் இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்காக TNPSC தேர்வாணையத்தினால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு பொதுத் தமிழ், பொது அறிவு மற்றும் திறனறிவு பாடங்களை உள்ளடக்கிய ஒரே தாளினைக் கொண்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD ANNUAL PLANNER
வகுப்பறை காணொளிகள்
சாதனையாளர்கள்
Related Post
How to Write Effective Answers in UPSC Mains
Is Online IAS Training Worth It? Explore Its Effectiveness
Mastering TNPSC: Your Comprehensive Guide to Crack the Exam with Ease
Power of online IAS training in cracking the UPSC exams
Proven strategies to succeed in the UPSC CSE preparation with online IAS training
Things to know before you choose virtual IAS training classes
How many exams are there in UPSC